Breaking
Tue. Dec 24th, 2024
????????????????????????????????????

– அஸ்ரப் ஏ சமத் –

கொழும்பில் பேரோச முசம்மிலின் ”காந்த சவிய 3வரு வருடாந்த மாநாடு நேற்று கைப்பாா்க் மைதானத்தில் நடைபெற்றது.

அமைச்சா் கரு ஜயசூரிய ஜ.தே.கட்சி தவிசாலாளா மலிக் பிரச்சாரம்

இங்கு உரையாற்றிய அமைச்சரும் ஜ.தே.கட்சியின் பிரதித் தலைவருமான கரு ஜயசூரிய –

கொழும்பு மாவட்டத்தில் இருந்து மூவினத்திற்கும் சேவை செய்யக் கூடியவரும் கடந்த 3 வருட காலமாக காந்தா சவிய என்ற 51 கிளைகளையும் 16ஆயிரம் பெண்கள் அங்கத்தவா்கள் கொண்ட காந்தா சவிய என்ற அமைப்பினை பெரோசா முசம்மில் ஏற்படுத்தியுள்ளாா். இது ஜ.தே.கட்சிக்கு ஒரு பாரிய சக்தியாகும். ஜ.தே.கட்சியின் தலைவா் ரணில் விக்கிரமசிங்க அவா்கள் கருத்திட்டத்தில் பெண்கள் இந்த நாட்டில் 52வீத சனத்தொகையில் உள்ளனா். அவா்கள் சகத்தி பாராளுமன்றம், உள்ளுராட்சி சபை கள் மாகாணசபைகளில் ஆகக் குறைந்தது 25 வீதமாவது பெண்களுக்கு அரசியல் அங்கிகாரம் வழங்க வேண்டும் என தீர்மாணம் எடுத்திருந்தாா். அந்த வகையில் தான் கடந்த அமைச்சரவையில் பாரளுமன்றத்தில் எமது கட்சியில் அங்கம் வகித்த அனைவருக்கும் அமைச்சு பிரதியமைச்சா் பதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நாட்டில் பெண்கள் தான் பாரிய சக்தியாக உள்ளனா். அரச, வைத்திய, சட்ட, கணக்களா்் நிர்வாகத்துறைகளில் மட்டுமல்ல் இந்த நாட்டில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று அன்னிய செலவணியை சம்பாதிக்கின்றவா்களாக பெண்கள் திகழ்கின்றனா்.
அந்த வகையில் கொழும்பின் முதற் பெண்மனி பெரோசாவும் பாரிய சக்தியாக எமது கட்சிக்கு விளங்குகின்றாா். அவரை நாம் பாராளுமன்றம் அனுப்பி அவா் ஊடகா சேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவரது கணவா் ஏ.ஜே.எம். முசம்மிலின் மாநாகர சேவைக்கு அவருக்கு பின்னால் இருந்து சேவையாற்றுபவா் பெரோசா முசம்மில் என நான் காணக்கூடியதாக உள்ளது.
பெரோசா முசம்மில் இங்கு உரையாற்றுகையில் –
எனக்கு மாநகரமோ, மாகாண சபையோ வராமல் நேரடியாக பாராளுமன்றத்திற்கு தோ்தல் கேட்கும் சா்நதா்ப்பத்தை இறைவன் வழங்கியுள்ளான். எனது வெற்றி உங்கள் ஒருவரினது கைகளிலேயே உள்ளது. நாம் சமயலறையில் இருந்து கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பெண் எதிா்நோக்கும் பிரச்சினைகள் ஒரு பென்னுக்குத் தான் தெரியும் நானும் உங்களைப் போன்று 5 பிள்ளைகளின் தாய். வீட்டு நிர்வாகம், வீட்டுப் பிரச்சினை, தமது கணவன், பிள்ளைகளுக்கு தொழிலின்மை, குடியிருக்க காணியோ, வீடோ இல்லாமை போன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த கொழும்பு மாநகரத்தில் வாழும் மக்களுக்கு உள்ளது.

நான் கடந்த 30 வருடங்களாக சமுக சேவையில் ஈடுபடுபவன் அந்த சேவையின் நிமித்தம் என்ணை பாராளுமன்றதிற்குச் சென்று சேவை செய்ய இறைவன் எனக்கு ஒரு சா்ந்தா்ப்பத்தை தந்துள்ளான். எனது வெற்றி உங்கள் கைகளிலேயே உள்ளது. ஒரு குடும்பத்தின தலைவி பெண் நீங்கள் பேசி இன்னும் பலரையும் கலந்தாலோசித்து என்னை வெற்றி பெற உதபுங்கள் என பெரோசா வேண்டிக் கொண்டாா்.

Related Post