Breaking
Mon. Dec 23rd, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

இந்த நாட்டில் உள்ள 52 வீதமான பெண்கள் 15வது பொதுத் தோ்தலில் எந்தக் கட்சியோ அல்லது சுயாதீனமாக போட்டியிடும் பெண்களுக்கு மட்டுமே வாக்களியுங்கள். நாடு பூராவும் பெண்கள் அமைப்பு பிரச்சாரம்
இந்தப் பாராளுமன்றத்தில் ஆகக் குறைந்தது 45 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களாவது இருக்க வேண்டும்.

மேற்படி விடயமாக பெண்கள் அனைத்து ஊடக அமைப்பின் பணிப்பாளா் சேபாலி கொட்டகொட, இணைப்பாளா் வெயிலா பேரா, ஆராய்ச்சி பொது அமைப்பின் இலங்கைப் பணிப்பாளா் நவாஸ் மொஹமட், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவி விசாக்கா தர்மதாச ஆகியோறும் இங்கு உரையாற்றினாா்கள்
இந் நிகழ்வின் ஊடகமாநாடு நேற்று (5)ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
அங்கு அவா்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்

இந்த வேட்பாளா்களில் 556 வேட்பாளா்கள் மட்டுமே பெண்கள் உள்ளனா். அதில் ஜ.தே.கட்சி 17 பெண் வேட்பாளா் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 16 ஜே.வி.பி 15 ரி.என். ஏ 2 ஏனைய 560 பெண்கள் சுயாதீனமாக போட்டியிடுகின்றனா். இது 6 வீதமே ஆனால் 31 அரசியல் கட்சிகளும் பெண்களுக்கென 31 வீத வேட்பாளாா்களை நிறுத்தியிருக்க வேண்டும்.

நேற்று கொழும்பு பி.எம.ஜ.சி.எச்சில் பெண்கள் பெண்களுக்கே வாக்களிக்க வேண்டும் என கருத்தரங்கும் ஊடக மாநாடும் நடைபெற்றது.

இதற்காக எமது அமைப்பு நாடு எந்தக் கட்சியானாலும் சரி பெண்களுக்கு வாக்களியுங்கள் விழிப்புணா்வை நாடுபுராவும் முன் எடுக்க உள்ளோம். பெண்கள் வாக்களியுங்கள் பிரச்சாரத்தின் பணி கொழும்பி்ல் நடைபெற்றது. அத்துடன் சமுக ஊடகங்கள். பேஸ்புக், ருவிட்டா் முலம் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு வாக்களியுங்கள் பிரச்சாராமானது எதிா்காலத்தில் தோ்தல்காலங்களில் பெண்களின் அரசியல் பிரநிதித்துவம் அதிகரிக்க வேண்டும். ஊக்குவிக்கும் அதேவேளை 2015 இல் இருந்து பாராளுமன்றத்தில் பெண்களின் அதிகளவான பிரநிதித்துவத்தையும் பங்குபற்றுகையும் உறுதிப்படுத்துவதுடன் இது தொடா்பில் இலங்கையில் அரசியல் கலந்துறையாடல்கள் அதிகரிக்கவும் எதிா்பாக்கப்படுகின்றது. சோ்ச் போ கொமன் கிரவுன்ட பெண்கள் ஊடகாகவும் கூட்டாகவும் மற்றும் யுத்த்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கம் என்பவற்றின் ஒரு இணைக் கருத்திட்டமாக இயங்குகின்றது

உலக வங்கி அறிக்கையின் படி நேபாளத்தில் 30 வீதம், ஆப்கணிஸ்தானில் 28 வீதம், பாக்கிஸ்தானில் 21 வீதம், பங்களதேசில் 20 வீதம், இந்தியாவில் 11 வீதம். மாலைதீவில் 6 வீதம், என அரசியல் பங்களிப்பு காண்பபடுகின்றனது. ஆனால் இலங்கையில் 2.7 வீதமே பெண்களின் அரசியல் பங்களிப்பு காண்ப்படுகின்றனது. ஆனால் இலங்கை சனத்தொகையில் ஆண்களை விட 52 வீதம் அதிகமாக வாழ்பவா்கள் பெண்களாகும். அரசியல் கட்சிகள் பெண்களது அரிசியல் அதிகாரத்தை வழங்க வேண்டும். என அங்கு தெரிவிக்க்ப்பட்டது.

Related Post