Breaking
Wed. Dec 25th, 2024

– அகமட் எஸ். முகைடீன் –

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றியினை உறுதிப்படுத்தும் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருது கடற்கரையில் அமைந்துள்ள ஆப்பிள் திடெலில் நேற்று முன்தினம் (8) மாலை நடைபெற்றது.

கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இவ்வெழுச்சிக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சரிமான றிஷாத் பதியுதீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏனைய வேட்பாளர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாய்நதமருதின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வெண்றெடுப்பதற்காக பெரு வெள்ளமாய்த் திரண்டிருந்த இம்மக்கள் கூட்டத்தில் முஸ்லிம்களின் தேசியத் தலைவராக றிசாத் பதியுதீன் பிரகடனப்படுத்தப்பட்டார்.

sai1.jpg2_1 sai1.jpg2_1.jpg3_1 sai1.jpg2_1.jpg3_1.jpg4_1 sai.jpg2_.jpg3_.jpg4_.jpg7_ sai.jpg2_.jpg3_.jpg5_ sai11

Related Post