Breaking
Sat. Nov 16th, 2024
?

வன்னி மாவட்டத்தில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக் கூடிய தவைராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இருக்கப் போகின்றார்.எனவே இந்த தேர்தலில் அவரது ஜக்கிய தேசிய முன்னணியினை வெற்றி பெறச்செய்து எமது வன்னி மண்ணில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடியவரான அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து செயற்பட போவதாக வன்னி மாவட்டத்தில் பிரஜைகள் முன்னணியில் 8 இலக்கத்தில் போட்டியிடும் இரா விக்டர் ராஜ் தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான அமைச்சர் றிசாத் பதியுதீனை மதவாச்சியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகவியலாளரிடத்தில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

வன்னி மாவட்டத்தில் 90 ஆயிரம் மலையக மக்கள் வாக்காளர்களாக இருப்பதாகவும் இவர்களது நலன்களை முன்வைத்து இந்த தேர்தலில் நான் போட்டியிட முன்வந்தேன்.இருந்த போதும்,தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் ஆதரவு ஜக்கிய தேசிய கட்சிக்கே இருப்பதால்,அந்தக் கட்சியினை வெற்றி பெறச் செய்வதன் மூலம் மட்டுமே வன்னி மாவட்டத்தில் வசிக்கும் மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற தீர்மதானத்தை எனது ஆதரவாரள்கள் சகிதம் எடுக்க நேரிட்டது.

வன்னி மாவட்டத்தில் வாழும் மலையக மக்களது எதிர்காலம் தொடராக அரசியல் தலைமைகளினால் புறக்கணிக்கப்பட்ட வந்த நிலையிலேயே நான் தேர்தலில் போட்டியிட நேரிட்டது.

கடந்த காலங்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இப்பிரதேச மக்களுக்கு பணியாற்றியுள்ளார்,எங்களுடைய நியாயமான கோறிக்கைகள் அவரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுமுள்ளது.இந்த நிலையில் பிரஜைகள் முன்னணியின் தலைமைத்துவம் கொழும்பை மையப்படுத்தியுள்ளதால் இப்பிரதேச மக்கள் அதன் மூலம் எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பதையும்,கொழும்பினை தலைமையத்துவமாக கொண்டு செயற்படும் தலைமையினால் மக்கள் ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர் என்று தெரிவித்த விக்டர் ராஜ் இந்த நிலையில் வன்னி மாவட்டத்தில் வாழும் மலையக தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய ஒருவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் .இருப்பதால் அவருடன் எமது மக்களது பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலினை நடத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

அதே வேளை வவுனியா மாவட்டத்தில் கூமாங்குளம்,தவசிக்குளம்,ராசேந்திர குளம்,பாலாமைக்கல்,பாரதிபுரம்,சுந்தரபுரம்,கணேசபுரம்,சிவபுரம்,நெலுக்குளம் உள்ளிட்ட பல கிராங்களில் இந்ித மலையக மக்கள் வாழந்து வருவதாகவும்,அவர்கயளது அபிவிருத்திகளை எதிர்காலத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் சேர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் கூறினார்.

Related Post