Breaking
Thu. Dec 26th, 2024

முஸ்லிம்களின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்ளாமல் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டமை வரலாற்றுத் துரோகமாகும். மீண்டும் அதனை இணைப்பதற்கான எந்தத் தேவையும் கிடையது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்க தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எமது கட்சிக்கு இரு ஆசனங்களைப் பெறுவதற்கான ஆணையை வழங்குவார்களாயின் எனது அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் அம்பாறை மாவட்ட கரையோர மாவட்ட நிருவாக அலகைப் பெற்றுக் கொடுப்பேன்.

எங்களது ஆதரவைப் பெற்றுக் கொள்ளாமல் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்க பிரதமாராக முடியாது.இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற முடியாது. அவ்வாறு வெற்றிபெற்று மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமாராக வருவாரானால் எமது கட்சிய ஒரு போதும் அவர்களுடன் இணைந்து செயற்படப் போவதில்லை என்றார்.

Related Post