Breaking
Sat. Nov 16th, 2024

– சையது அலி பைஜி –

உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சீனாவாகும் சீனாவின் பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்

இஸ்லாத்தை முறையாக அறிந்து கொள்ளகுடியவர்கள் இஸ்லாத்தில் தங்களை இணைத்து கொள்வதாலும் சிந்திக்ககுடியவர்களின் புகலிடமாக இஸ்லாம் இருப்பதாலும் பொது உடமை தத்துவத்தின் புதைகுழியாக இஸ்லாம் இருப்பதாலும் இஸ்லாம் தொடர்ப்பான செய்திகள் சீனர்களை அதிகம் சென்று அடையாத விதத்தில் இஸ்லாமிய தகவல்களுக்கும் சீனர்களுக்கும் இடையே ஒரு இரும்பு திரையையே சீன அரசு உருவாக்கி வைத்துள்ளது

இதன் விளைவு சீனர்களில் 90% பேர் இஸ்லாத்தை பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாதவர்களாக உள்ளனர் அதுபோல் 65% சீனர்கள் இஸ்லாம் என்றால் என்னவென்றே அறியாதவர்களாக உள்ளனர் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது

90% மக்களுக்கு இஸ்லாத்தை பேற்றிய அடிப்படை அறிவு இல்லாத நிலையிலும் 65% மக்கள் இஸ்லாத்தை பற்றி கேள்வி படாத நிலையிலும்

சீனாவில் இஸ்லாம் வேருன்றி இருப்பதையும் சீன ஆட்சியாளர்களுக்கு இஸ்லாம் சிம்ம சொப்பனமாக மாறியிருப்பதையும் சிந்திக்கும் போது

இஸ்லாமிய செய்திகளுக்கும் சீனர்களுக்கும் இடையே இருக்கும் இரும்பு திரை தகர்கபட்டு சீனர்களை இஸ்லாமிய பிரச்சாரம் முறையாக சென்றடைந்தால் சீனர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தழுவுவதை எவராலும் தடுக்க முடியாது

சீனாவை போன்ற இரும்பு திரை நாடாக திகழ்ந்த சோவியத் கூட்டமைப்பு உடைந்து சிதறியதர்கு அங்கு உருவான இஸ்லாமிய எழுட்சியும் ஒரு முக்கிய காரணமாகும்

சோவியத் கூட்டமைப்பின் இரும்பு திரியையை முஸ்லிம் தகர்ந்து எறிந்தது போல் சீனாவின் இரும்பு திரையையும் முஸ்லிம்கள் நிச்சயம் தகர்த்து எறிவார்கள் அந்த நாளில் சீனாவில் உருவாகும் இஸ்லாமிய எழுட்சியையும் புரட்சியையும் எந்த சக்திகளாலும் தடுத்து நிறுத்த முடியாது.

Related Post