Breaking
Tue. Dec 24th, 2024
அரசியல்வாதிகள் இன்று முதல் தேர்தல் வரை அரச வைபவங்களில் கலந்துகொள்வதற்கு தேர்தல் ஆணையாளர் தடை விதித்துள்ளார்.
இதன்படி எந்த வேட்பாளரும் மாகாணசபை , உள்ளூராட்சி சபைகளின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் , அல்லது முடிவடைந்த திட்டங்களை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் வேட்பாளர் ,  மாகாணசபை  , உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எவரையும் இத்தகைய நிகழ்வுகளுக்கு அழைக்கவேண்டாமென தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related Post