Breaking
Sat. Nov 16th, 2024

இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச சவால்­க­ளுக்கு முகம் கொடுக்­கவும், ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் இன ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­தவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் மட்­டுமே முடியும். ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்தி­யதன் விளை­வா­கவே நாட்டுக்கு எதி­ரான சவால்­களை வெற்­றி­கொள்ள முடிந்­தது என ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் வேட்­பா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது தவ­றி­யேனும் மஹிந்த ராஜ­பக்ஷ வென்­றி­ருந்தால் நாட்டில் மிகப்­பெ­ரிய குழப்பம் ஏற்­பட்­டி­ருக்கும். வடக்கில் தொடர்ந்தும் அடக்­கு­முறை கையா­ளப்­பட்­டி­ருந்தால் மற்றும் இரா­ணுவ சப்­பாத்­து­களில் தமிழ் மக்­களை அடக்கி வைத்­தி­ருந்தால் இன்று நாட்டில் மீண்டும் ஒரு உரி­மைக்­கான கல­வரம் தலை தூக்­கி­யி­ருக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

நேற்று நுகே­கொ­டையில் நடை­பெற்ற மக்கள் கூட்­டத்தின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் கூறு­கையில்,

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது ஏற்­பட்ட ஆட்சி மாற்­ற­மா­னது நாட்டில் ஜன­நா­ய­கத்­தையும் ,மக்கள் தமது உரி­மை­களை வென்­றெ­டுக்க நல்­ல­தொரு வாய்ப்­பையும் வழங்­கி­யது. அதேபோல் நாட்டின் தேசிய பாது­காப்பை பலப்­ப­டுத்­தவும், நாட்­டுக்கு எதி­ராக எழுந்­துள்ள சர்­வ­தேச அழுத்­தங்­களில் இருந்து விடு­ப­டவும் இந்த ஆட்­சி­மாற்றம் நல்­ல­தொரு சந்­தப்­ப­மாக அமைந்­துள்­ளது.

எனினும் தவ­றி­யேனும் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் கூட்­டணி வெற்றி பெற்­றி­ருந்தால் இந்த நாடு மிகப்­பெ­ரிய சவால்­க­ளுக்கு முகம் கொடுக்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருக்கும்.

குறிப்­பாக ஐரோப்­பிய ஒன்­றி­யமும் அமெ­ரிக்­காவும் எமக்கு எதி­ரான பலத்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருக்கும். எமது இரா­ணுவ வீரர்­களின் உயிர் தியா­கத்தின் மூலம் வென்­றெ­டுத்த இந்த நாட்டின் சமா­தா­னத்­துக்கு மிகப்­பெ­ரிய அடி விழுந்­தி­ருக்கும். எமது இரா­ணு­வத்தை சர்­வ­தேச கூண்டில் நிறுத்தி தண்­டனை வழங்­கி­யி­ருப்­பார்கள். அதேபோல் நாடு இரண்­டாக பிரிந்து நாட்டில் மீண்டும் ஆயுத கலா­சாரம் தலை தூக்­கி­யி­ருக்கும்.

ஆனால் இந்த நிலை­மையில் இருந்து நாட்­டையும் நாட்டைக் காப்­பாற்­றிய இரா­ணுவ வீரர்­க­ளையும் இந்த ஆட்சி மாற்­றமே காப்­பாற்­றி­யது. அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்­சியின் முயற்­சியும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­யீ­டுமே நாட்டை சரி­யான பாதையில் முன்­னெ­டுத்து செல்­கின்­றது.

வடக்கில் புலி­களின் ஆதிக்கம் மீண்டும் தலை தூக்­கி­யுள்­ள­தாக மஹிந்த பிரச்­சாரம் செய்­கின்றார். ஆனால் வடக்கில் தொடர்ந்தும் அடக்­கு­முறை கையா­ளப்­பட்­டி­ருந்தால் மற்றும் இரா­ணுவ சப்­பாத்­து­களில் தமிழ் மக்­களை அடக்கி வைத்­தி­ருந்தால் இன்று நாட்டில் மீண்டும் ஒரு உரி­மைக்­கான கல­வரம் தலை தூக்­கி­யி­ருக்கும். எனினும் ஆட்சி மாற்­றத்­துடன் வடக்கில் ஜன­நா­ய­கத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டதன் மூலமும் நாட்டில் சகல மக்­க­ளுக்­கு­மான உரி­மை­களை பலப்­ப­டுத்­தி­யதன் மூல­முமே பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தலில் இருந்து நாடு விடு­பட்­டுள்­ளது.

அதேபோல் உலகின் பொரு­ளா­தார ரீதியில் வளர்ச்சி கண்ட நாடுகள் எம்­முடன் எந்­த­வித பொரு­ளா­தார உற­வு­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. மாறாக சர்­வ­தேச விசா­ரணை, போர்க் குற்­றச்­சாட்­டுகள் மற்றும் நாட்டின் மனித உரிமை மீறல்கள் என்ற விட­யங்­களை மட்­டுமே சுட்­டிக்­காட்டி வந்­தனர். ஆனால் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சியில் நாம் இழந்­தி­ருந்த சர்­வ­தேச நம்­பிக்­கை­யி­னையும் அவர்­க­ளது உதவிகளையும் மீண்டும் பெற்றுள்ளோம். அதேபோல் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களையும் குறைத்துள்ளோம்.

எனவே இலங்கை மீதான சர்வதேச சவால்களுக்கு முகம் கொடுக்கவும், ஒன்றிணைந்த நாட்டுக்குள் இன ஐக்கியத்தை ஏற்படுத்தவும் ஐக்கிய தேசியக் கட்சியால் மாதிரமே முடியும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

Related Post