Breaking
Tue. Dec 24th, 2024

மஜீத் அவர்களை ஆதரித்து ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பொத்துவில் பாக்கியவத்தையில் நேற்று (10) இடம் பெற்றது.

இக்கூட்டத்தில் பெருந்தொகையான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்
இக்கூட்டத்தின் போது முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் எஸ்.எஸ்.பீயுமான எம். அப்துல் மஜீத் உரையாற்றுகையில்….

பொத்துவில் மக்களாகிய எங்களுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை இலகுவாக பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது இச்சந்தர்பத்தை தவர விடாமல் நீங்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்து இந்த ஊர் மன்னை காப்பாற்றுங்கள்.

ஊருக்காகவும் என்னை ஆதரிக்கும் அனைத்து ஊர் மக்களுக்கும் நான் சிறந்த சேவைகளை செய்யவுள்ளேன் அதற்க்காக எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள்.

நான் எஸ்.எஸ்.பீயில் யுத்த காலத்தில் இருக்கும் போது பல சேவைகளை எனது மக்களுக்காக செய்திருக்கின்றேன்.அது போன்று பாராளுமன்றத்தில் இருந்து உங்களுக்காக, நம் மன்னுக்காக, நம் மக்களுக்காக பலசேவைகளை செய்ய வேண்டும் இதுவே எனது ஆசை அதற்காகத்தான் நான் 2015க்கான பொதுத் தேர்தலில் வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன் இதுதான் என்னுடைய கடைசித் தேர்தலும் அத்துடன் பொத்துவிலுக்கு கிடைத்திருக்கின்ற கடைசி சந்தர்ப்பமும் இதுவே என்று சொல்லுகின்றேன். எனவே நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் .

இம்முறை பொத்துவில் மன்னுக்கு கிடைக்கின்ற வெற்றியில்தான் பொத்துவிலின் எதிர்காலமே இருக்கின்றது. இம்முறை நான் வெற்றி பெற்றால் தொடர்ந்தும் நாம் எம் மன்னுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆகையினால் எனக்கு வாக்களிப்பதற்காக எமது மக்கள் தயாராக இருப்பதனை என்னால் அறியக்கூடியதாக இருக்கின்றது. உங்கள் வாக்குகளால் நிச்சயமாக நான் பாராளுமன்றம் செல்வேன் என்பது உறுதியாகிவிட்டது. எனவே இருக்கின்ற ஒவ்வொருத்தரும் வேட்பாளராக வேண்டும் நமது மன்னுக்காக பாடுபட வேண்டிய காலகட்டமிது எமது ஊரில் நல்லதொரு அரசியலை நாம் அமைக்க வேண்டும் கொந்தராத்து செய்யும் அரசியலுக்கு அடிபணியக்கூடாது.

நான் கொந்தராத்து கொல்லை செய்வதற்காக அரசியலுக்கு வரவில்லை நான் வாழ்வதற்கான சகல வசதிகளும் என்னிடம் இருக்கின்றது நான் அரசியலுக்கு வந்திருப்பது உங்களுக்காகவும் எம்மன்னின் மறியாதைக்காகவும்தான் எனவே நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். என்று பாக்கியவத்தையில் நேற்று (10) இடம் பெற்ற கூட்டத்தின் போது அவர் இவ்வாரு உரையாற்றினார்.

Related Post