Breaking
Sat. Nov 16th, 2024

– எஸ்.அஷ்ரப்கான் –

மர்ஹூம் அஷ்ரபின் அரசியல் பயணத்தில் தொடங்கிய எமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் நாம் பலம் மிக்கவர்களாக மாறவேண்டு மென்றால் எமது வாக்குப் பலத்தை காட்டுவதற்காக எல்லோரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள். ஏனெனில் மறைந்த தலைமையின் அடியோட்டிய தலைமை அமைச்சர் றிஷாட் பதியுதீன் மட்டுமே என்பது மக்களுக்கு இன்று விளங்கிவிட்டது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் முஹம்மட் லத்தீப் தெரிவித்துள்ளார்.

கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கருத்தரங்கு நேற்று முன்தினம் (09) நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்;தும் குறிப்பிடும்போது,

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எமது கட்சியின் தலைமை மிகவும் பிரயத்தனம் எடுத்து செயலாற்றி வருகிறது எதிர்வரும் தேர்தல் முடிந்த கையோடு வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நல்லாட்சி அரசுடன் இணைந்து நாமும் நிறைவேற்ற இருக்கின்றோம்.

இன்று தேர்தல் களத்தில் மு.கா வினரால் பொய் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகிறது. அதனை மக்கள் நன்கு உணர்வார்கள். அதற்காக மக்கள் தேர்தலை பகிஸ்கரிப்பதென்பது சமூகத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தாது. சேவை செய்யாத அரசியல்வாதிகளை புறம் தள்ளுவது நியாயமானதே. அதற்காக வாக்களிக்காமல் இருக்க கூடாது.

எல்லோரும் வாக்களித்தால் சகல பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் வாக்களிப்பது நம் கடமை, அதை செய்யாதவன் எந்த உரிமையையும் கேட்க தகுதியற்றவன்.

நாங்கள் எடுத்திருக்கின்ற விடுதலைப் பயணம் என்ன சிக்கல்கள், சவால்கள் வந்தாலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் அதற்காக எமது கட்சியான அ.இ.ம. காங்கிரஸ் அயராது பாடுபடும். அம்பாரை மாவட்டத்தில் எமது கட்சிக்கு கிடைக்கும் வாக்கு வங்கியின் அடிப்படையில் எமது கைகள் பலப்படுத்தப்படும் போது எமது விடுதலைப்பயணமும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

எனவே நாம் கேட்பதை அரசியல்வாதிகள் பெற்றுத்தரவில்லை என்பதால் நாம் எந்த அரசியல்வாதிகளுக்கும் வாக்களிக்காமல் தேர்தலை பகிஸ்கரிப்போம் என்பது மக்களின் தவறான முடிவாகும். சமூகக் காவலர்கள் இன்று அம்பாரையிலும் கால் பதித்திருக்கின்றார்கள். எங்களின் கைகள் பலப்படுத்தப்படும்போது எமது முழு நாட்டு மக்களும் மிகச் சிறப்பாக வாழ்வதற்கான வழி ஏற்படுத்தப்படும். இதற்காகவே இன்று பொதுத் தேர்தலில் சிறந்த படித்த பண பலமுள்ள அறிவாளிகளை எமது கட்சியில் உங்கள் முன் நிறுத்தியிருக்கின்றோம்.

தொழிலதிபர்கள், முன்னாள் உப வேந்தர், சிரேஷ்ட விரிவுரையாளர் என ஒரு துடிப்புள்ள பட்டாளமே உமக்கு சேவை செய்ய முன் வந்திருக்கின்றார்கள். இவர்களை பாராளுமன்றுக்கு அனுப்புவதன் ஊடாக நாம் பெறும் உரிமை அபிவிருத்தி என்பன நிலையானதாகவும் எமது மக்களின் நீண்டகால தேவையினை நிறைவு செய்வதாகவும் அமையும். இதனை உணர்ந்து எல்லோரும் தமது வாக்குகளை எமது கட்சிக்கு வழங்க முன்வர வேண்டும்

Related Post