ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து மீதான மோகம் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அடிக்கடி கலவரம் ஏற்படுவதும், ரசிகர்கள் அடித்துக்கொண்டு இறப்பதும் வாடிக்கைதான். இதன் தொடர்ச்சியாக தற்போது பத்திரிகையாளர் ஒருவர் கால்பந்து ரசிகரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்து தனி நாடான அஸர்பைஜான் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் அசிம் அல்ஜியேவ். இவர் கால்பந்து போட்டியின் போது பத்திரிகையாளரை நோக்கி தவறான சைகை செய்த, ஹபாலா என்ற கால்பந்து கிளப்பின் வீரரான ஜாவித் ஹூசேனேவ்வை பேஸ்புக்கில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த ஜாவித்தின் ரசிகர் ஒருவர் அசிம் அல்ஜியேவ்வை, பொய் சொல்லி தனியாக அழைத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அசிம் மருத்துவமனையில் உயிரிழந்தார்.