மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை ஊடாக ஜனாதிபதி செயலகம் வரையிலும் பேரணி நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படும் வைத்திய மாணவர் சங்கத்தின் செயற்பாட்டாளர்கள் 11 பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நோட்டீஸ் அனுப்புமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகேயே நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தை மீறி இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஒன்றுதிரட்டி மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கும் வகையிலான செயற்பாடுகளை திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பு கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.