மாத்தறை வாழ் மக்களுக்கு எந்தவித சேவையும் செய்ய முடியவில்லை என நான் மன விரக்தி யுடன் இருந்தேன். இதனாலேயே ஐ.ம.சு. முன்னணியில் இருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் நான் விலகினேன்.
இவ்வாறு ஐ.ம.சு.முன்னணியின் முன்னாள் அமைச்சரும், விளையாட்டு வீரருமான சனத் ஜயசூரிய கூறினார். நேற்று முன்தினம் (11) மாத்தறை – பம்புரணையிலுள்ள ஐ.தே.முன்னணியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊழல் மோசடிகளற்றவர்களையே இம்முறை பாராளுமன்றத்திற்கு மக்கள் அனுப்ப வேண்டும். இதற்குப் பொருத்த மானவர் சாகல ரத்னாயகவே என்று கருதுகிறேன். ஐ.ம.சு. முன்னணியில் அமைச்சராக இருந்து சரியானதை என்னால் செய்ய முடியாமல் போனதை யிட்டு மிகவும் கவலையடைந் தேன். எனவே நான் அந்தக் கட்சியிலிருந்தும் வெளியேற முடிவு செய்தேன்.
மீண்டும் மக்களை ஏமாற்றி எம்.பி. பதவியை பெற விரும்பவில்லை. நல்லாட்சியின் கீழ் நாடு வீறுநடை போடுவதையை நாம் காண விரும்புகிறேன்.
மாத்தறை மாவட்டத்தில் ஐ.தே.முன்னணி வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று அவர் கூறினார்.