– இர்ஷாத் றஹ்மத்துல்லா –
புத்தளத்து மக்களை அடக்கு முறை அரசியலுக்குள் வைத்து செயற்படும் கலாசாரத்துக்கு முடிவுகட்டி ஜனநாயகமாகவும்,சுதந்திரமாகவும் செயற்படும் பாதைக்குள் பிரவேசிக்க அனைவரும் ஜக்கிய தேசிய கட்சியில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் எமது வேட்பாளர்களை வெற்றியடையச் செய்வதன் மூலம் இந்த அடிமைச் சங்கிலியினை உடைத்தெறிய முடியும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதயுதீன் சுயேட்சை அணியாக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாறுகள் இல்லை என்பதாலும்,சுயேட்சை அணியில் போட்டியிடும் கற்றவர்கள்,பொறியியலாளர்கள் எம்முடன் வந்து இணைந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுத்தார்.
புத்தளம் போல்ஸ் வீதி மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு ஜக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த தேர்தல் மேடையினை நாம் சமூகத்தின் விமோசனத்திற்கும்.விடிவுக்குமாகவே பயன்படுத்துகி்ன்றோம்.அரசியலில் நாம் சாதிக்க வேண்டியது எத்தனையோ உள்ளது.ஆனால் வங்குரோதம்து அரசியல்வாதிகள் தமது அடியாட்களை வைத்துக் கொண்டு நிரந்தரை அரசியல்வாதியென நினைக்கின்றார்.இவ்வாறு ராஜ கோபுர அரசியல் செய்தவர்கள்,தமது காலம் வருவதற முன்னரே பதவியில் இருந்து துாக்கி எறியப்பட்டுள்ளனர் என்பதை இன்னும் புரியாமல் இருக்கின்றீர்கள்,மக்களுக்கு அரசியல் உரிமையினை கொடுக்காமல் அதனை தனிப்பட்டதொன்றாக வைத்துக் கொண்டு செயற்படும் அரசியல் கலாசாரத்தை மாற்றுகின்ற ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
நான் என்னுடைய பாராளுமுன்ற பிரவேசத்தை அகதி முகாமில் இருந்து தான் ஆரம்பித்தேன்.அதனால் தான் மக்களது வேதனையும்,வலியும் தெரிகின்றது.நாம் அகதியாக எமது மண்ணில் இருந்து வந்த போது எமக்கு அடைக்கலம் தந்து வாழ்வளித்த மக்கள் புத்தளத்து மக்கள்,அதனை நாம் ஒரு போதும் மறக்கமாட்டோம்.எமது அகில இலங்கை மக்கள் காங்கிரிஸ் கட்சி கடந்த உள்ளுராட்சி,மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தலிகளின் எந்தவொரு வேட்பாளரையும் புத்தளத்தில் நிறுத்தவில்லை,அது மக்கள் விரும்புகின்றவர்களை தெரிவு செய்யட்டும் என்றும் இருந்ஆதாம்.ஆனால் அதிலும் எமது ச5கம் தவறு இழைத்தது.இந்த நிலை தொடருமெனில் இந்த பாராளுமன்றத் தேர்தலிலும் நாம் எமது பிரதி நிதித்துவத்தை இழக்க நேரிடும் என்ற அச்சம் எம்மில் ஏற்பட்டது.எனவே தான் இந்த அருமையானதொரு வெற்றிப் பெறக் கூடிய சந்தர்ப்பத்தை நாம்கானுகின்றோம்.எனவே தான் சிறந்த அரசியல் அனுபவம் கொண்ட,சமூகத்திற்கு தேவையான பண்புள்ளவர்களை நாம் இந்த பட்டியிலில் இட்டுள்ளோம்.
அவர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் இந்த புத்தளம் மாவட்ட சிறுபான்மை முஸ்லிம்,தமிழ் மக்கள் எத்தனையோ நன்மைகளை அடையவுள்ளார்கள்.புத்தளம் மாவட்டத்தில் இடம் தற்போது 1 இலட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் இருக்கின்றன.இந்த வாக்குகளுக்குள் வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து தற்போது புத்தளத்தில் நிரந்தர பதிவுகளை கொண்ட வாக்காளர்கள்,அன்னளவாக 18 ஆயிரம் வரை இருக்கின்றனர்.இந்த நிலையில் புத்தளம் தொகுதி ஜக்கிய தேசிய கட்சியின் கோட்டையாகும் என்பதாலும்,எம்மால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள எமது சமூக வேட்பார்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வருவதற்கான சாத்தியப்பாடுகள் இன்னும் அதிகரித்து காணப்படுகின்றது.
இந்த நிலை இனி மீண்டும் கிட்டுமா என்பது கேள்வியாகும்.கடந்த தேர்தல்களில் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட மர்ஹூம் ஹாபி அவரக்ளும்,தற்போதைய வேட்பளார் நவவி அவர்களும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளை பெற்ற போதும்,பாராளுமன்ற பிரவேசத்தை அடைந்து கொள்ள முடியாத நிலையே காணப்பட்டது.இன்று அந்த நிலை இங்கு இல்லை.இந்த தேர்தலில் புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிர்கட்சி போட்டி அரசியல் ஒனறு என்பது தற்பொது இல்லை.தற்போதைய விகிதாசார தேர்தல் முறையில் சுயேட்சை அணிகள் பாராளுமன்றத்துக்கு செல்வதற்கான எந்தவொரு வாய்ப்பும இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த சுயேட்சை அணி வெற்றி கொள்ளாது என்பதை அறிந்து கொண்டும் எமக்கு கிடைக்கும் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் பறிக்கப்படுவதற்கு காரணமாக இதில் போட்டியிடும் பெறியியலாளர்கள்,துறை சார்ந்தவர்கள் இருந்துவிடக் கூடாது.நீங்கள் இவ்வாறு செய்வீர்களெனில் இதனை விட இந்த மக்களுக்கு இழைக்கும் அநியாயம் வேறு எதுவும் இருக்காது.
என்மீது அபாண்டங்களை சுமத்துகின்றனர்.நான் புத்தளத்தை ஆளப் போவதாக,நாம் இங்கு அகதிாயக வந்த போது அரவணைத்த மக்களுக்கு அவ்வாறானதொரு துரோகத்தை செய்யமாட்டோம்,நீங்களே உங்களை ஆள வேண்டும் என்ற விடயத்தில் நான் உறுதியாக இருக்கின்றேன்.ஆனால் இந்த மக்களை அடிமைகளாக தான் மட்டும் தான் அடக்கி,ஒடுக்கி,அச்சுறுத்தி மற்றவர்கள் அபிவிருத்திகளை கொண்டுவருகின்ற போது அதனை தடுக்கும்,அப்பணிகளை மக்கள் அனுபவிக்கவிடாத அரசியல் கலாசாரத்தினை இந்த தேர்தலுடன் துடைத்து எறிய வேண்டும் என்ற அன்பான வேண்டுகொளளையும் இங்கு வேண்டிக் கொள்கின்றேன்.
புத்தளம் மக்கள் எங்களை கௌரவிததுவருகின்றமையானது இந்த நாட்டு வரலாற்றில் வந்தாரை வாழ வைத்த ஊரை் என்கின்ற வரலாற்று பதிவை ஏற்படுத்தியுள்ளது.அப்படிப்பட்ட இந்த மக்களுக்கு தனியான தமிழ் மொழி மூலமான தொழிந் நுட்ப கல்லுாரி ஒன்றை பாலாவியில் நிர்மாணிக்க முயற்சித்த போது அதனை தடுத்து நிறுத்தினர்.புத்தளத்தின் கணிகளில் ஒன்றான புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியின் கறுப்புத் தரவையினை நவீன வசதியுடன் புனரமைப்பு செய்ய முயற்சித்த போது அதனையும் தடுத்தார்கள்,அது போன்று எத்தனை தடைகள் அதனால் தான் கடந்த 5 வருடகாலமாக நாம் புத்தளத்து அபிவிருத்தியில் இருந்து துாரமாக வேண்டியேற்பட்டது.இந்த மக்கள் நல்லவர்கள்,இந்த அரசியல் தலைமைகளால் தான் நாம் சவால்களுக்கு முகம் கொடுத்தோம்,முட்டி மோதிக் கொண்டுட இந்த பணிகளை செய்ய முடியாது,
இந்த பயணத்தை நாம் சரிவர முன்கொண்டு செல்ல வேண்டும்,அதற்காக தான் நல்ல அரசியல் தலைமைகளை பாராளுமன்றத்து தெரிவு செய்யுங்கள் என்று கேட்கின்றோம்.அவர்கள் மூலம் எமது புத்தளம் சமூகம் இழந்த எத்தனையோ அபிவிருத்தி பணிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் கொண்டுவருவோம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.