பொது பல சேனா, ராவண பலய ஆகிய அமைப்புகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது செயற்பட்டதெனவும் தற்போது அவற்றில் ஒன்றேனும் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொது பல சேனா அமைப்பினாலேயே ஏனைய அமைப்புகளுக்கும் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது,
தற்போது ராஜபக்சர்கள் அதிகாரத்தில் இல்லை என்பதனால் அவ் அமைப்புகளும் நாட்டில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனவரி மாதம் 08ம் திகதி இந்நாட்டில் ஏற்படுத்திய புரட்சியை மேலும் தொடர்வதற்கு தான் உட்பட குழுவினர் சிறப்பாக முயற்சிப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார்.