Breaking
Sat. Nov 16th, 2024

யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை பிரேத அறையில் பரி­சோ­த­னைக்­காக வைக்­கப்­பட்டு இருந்த குழந்­தையின் முகத்தை எலிகள் கடித்த சம்­ப­வ­மொன்று  யாழ்.போதனா வைத்­தி­ய­சாலையில் இடம்­பெற்­றது. இதனால் அச் சட­லத்தை பொறுப்­பேற்க பெற்றோர் மறுத்­துள்­ளனர்.

இச் சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

உடுவில் பகு­தியில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை ஒன்று மூச்­சுத்­தி­ணறி இறந்­துள்­ளது. குழந்­தையின் உடலை பிரேத பரி­சோ­தனை செய்­வ­தற்­காக யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை பிரேத அறையில் சடலம் வைக்­கப்­பட்டு இருந்த நிலையில் எலிகள் குழந்­தையின் முகத்தை கடித்து குத­றி­யுள்­ளன.

இந்­நி­லையில் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் பிரேத பரி­சோ­த­னையை மரண விசா­ரனை அதி­காரி நம­சி­வாயம் பிறேம்­குமார் மேற்­கொண்­டதைத் தொடர்ந்து சட­லத்தை பெற்­றோர்­க­ளிடம் ஒப்­ப­டைக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இதன்­போது குழந்­தையின் சடலம் அவ­ல­மான நிலை­மையில் காணப்­பட்­டுள்­ளது.இதன் கார­ணமாக சட­லத்தை பெற்­றோர்கள் ஏற்க மறுத்­த­துடன் சட­லத்தை யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லை­யினால் அடக்கம் செய்ய அனு­ம­தித்து சென்­றுள்­ளார்கள்.

இதே­வேளை எதிர்­கா­லத்­திலும் இறந்­த­வர்­க­ளு­டைய உட­லுக்கு இத்­த­கைய நிலை­மைகள் ஏற்­ப­டாத வண்ணம் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்கொள்ளவேண்டிய கடமையும் பொறுப்பும் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு உரியதென பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post