Breaking
Sat. Nov 16th, 2024
நான் ஜோதிடம் பார்த்து, நேரம் பார்த்து தேர்தல் தினத்தை தீர்மானிப்பவனில்லை. அதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளது. புத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால் நாம் எப்படி அதைச் சார்ந்திருக்க முடியும்? – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.
கொழும்பு – 07 இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாட்டின்போது “ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஜோதிடம் பார்த்து, நேரம் பார்த்து, தேர்தல் தினத்தை தீர்மானிப்பதில்லை. அதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளது. அவர் ஏற்றுக்கொள்வதென்றால் ஏற்பார். இல்லாவிட்டால் இல்லை. ஜோதிடம் என்பது எமது கவனத்துக்குக் கொண்டுவரப்படும் ஒரு சாத்திரமாகும் என்றே நான் நினைக்கின்றேன். அதில் நாம் சார்ந்திருக்க முடியாது. புத்தர் சார்ந்திருக்கவில்லை என்றால் நாம் எப்படி சார்ந்திருக்க முடியும்? – என்று ஜோதிடம் குறித்து நேற்றுக் கருத்து வெளியிட்டார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
எதிர்காலத்தில் பணம் சம்பாதிப்பதற்கு இது ஒரு நல்ல வழி. சென்னையில் சோதிடம் பார்ப்பதற்கு 200 டொலர் பணம் அறவிடப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post