மகி நூடில்ஸ் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மும்பை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
மகி நூடில்ஸ் உணவுப் பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காரீயம் இருந்ததாகக் கூறி, மத்திய உணவு தர பாதுகாப்பு ஆணையம் தடை விதித்து இருந்தது. அதனையடுத்து இந்தியாவில் மகி நூடில்ஸ் விற்பனை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தத் தடையை எதிர்த்து மகி நூடில்ஸ் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம் வழக்குத் தொடர்ந்து இருந்தது.
இவ்வழக்கை இன்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், மகி மீதான தடையை நீக்கியும், மகி நூடில்ஸை விற்பனைக்கு அனுப்பும் முன்னர் புதிதாக ஆய்வுகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.