தங்க நிறத்திலான பக்கங்களில் பதிவு செய்ய பட்ட திருகுர்ஆன் பிரதியொன்று இந்தியாவில் பரபரப்புக்கு உரியதாக மாறியிருக்கிறது
சுமார் 604 பக்கங்களை கொண்ட அந்த பிரதியின் பக்கங்கள் அனைத்தும் பொன்னிறத்தில் இருக்கிறது
இது 400 ஆண்டுகாலபழமை வாயந்த குர்ஆன் என்றும் முகலாய மன்னர் அக்பருக்கு பிறகு வந்த காலத்தில் எழுதபட்டது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்
சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகரை சார்ந்த சிலர்கள் சுமார் ஐந்து கோடி ரூபாயை பெற்று கொண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அந்த குர்ஆனை விர்பனை செய்ய முயன்றுவருவதாக கர்நாடக காவல் துறைக்கு வந்த தகவலை அடிப்படையாக கொண்டு காவல் துறையினர் விசாரணையில் இறங்கினர்
இறுதியில் ஐந்து கோடி ரூபாய் தந்து நாங்கள் அதை பெற்று கொள்கிறோம் என புலனாய்வு காவலர்கள் குர்ஆனை வைத்திருந்தவர்களிடம் கூறி அவர்களை வரவழைத்து அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து அந்த பொன்னிற குர்ஆனையும் பறிமுதல் செய்துள்ளனர்
இந்த பிரச்சனையில் மைசூரை சார்ந்த பத்து நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
அவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பது குறிப்பிட தக்கது
முஸ்லிம்களின் வேதமான குர்ஆன் அதுவும் முஹலாய மன்னர்களின் காலத்தில் பெரும் பொருள் செலவில் அழகுபடுத்த பட்ட குர்ஆன் முஸ்லிம் அல்லாதவர்களின் கரங்களுக்கு எப்படி வந்தது
முஹலாயர்களிடம் இருந்தே திருடபட்டு பாதுகாக்க பட்டு வந்ததா அல்லது அரசின் கட்டுபாட்டிலிருந்ததை திருடி கொண்டு வரபட்டதா என்பது விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும்