அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், மாநிலத்தில் 175 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள ஏரிகளில் உள்ள குறைந்த அளவிலான நீரும் ஆவியாகிவிடாமல் தடுக்க ஏரி முழுவதும் கருப்பு பந்துகளை மிதக்கவிடும் நூதன திட்டத்தை கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகர மேயர் எரிக் கார்செட்டி அறிவித்துள்ளார்.
சூரிய ஒளிக் கதிர்கள் நீரில்பட்டு அவை ஆவியாவதில் இருந்து இந்த கருப்பு நிற பந்துகள் காக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து லாரிகளில் கொண்டு வரப்பட்ட 96 லட்சம் கருப்பு நிற பிளாஸ்டிக் பந்துகள் ஏரிகளில் கொட்டப்பட்டுள்ளது.
இதனால் ஆண்டுக்கு 300 கேலன் அளவு தண்ணீர் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.