Breaking
Mon. Dec 23rd, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி கலைக்கப்படவுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கிடையில் கைச்சாத்தான ஒப்பந்தம் ஒன்றின் மூலமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உருவானது.

சுமார் 11 ஆண்டுகளாக இக்கூட்டணி அதிகாரத்தில் இருந்துள்ளது.

இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளின் அநீதியான தலையீடுகளைத் தவிர்க்கும் பொருட்டு கூட்டணியை கலைத்துவிட அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தீர்மானித்துள்ளார்.

பெரும்பாலும் எதிர்வரும் 24ம் திகதி கூட்டணியைக் கலைப்பது தொடர்பான அறிவித்தல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பின்னர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ள சுதந்திரக் கட்சிக்கு பிரதிப் பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது.

இப்பதவிக்கு நிமால் சிறிபால டி சில்வா நியமிக்கப்படவுள்ளததாகாக தெரிய வந்துள்ளது.(tw)

Related Post