இலங்கைத் தேர்தல் தொடர்பில் அமெரிக்கா வரவேற்பை வெளியிட்டுள்ளது.ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு அரசாங்கமும் பொதுமக்களும் காட்டிய சிரத்தை வரவேற்கப்பட வேண்டியது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளர், வேட்பாளர்கள், சிவில் சமூகத்தினர் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2
இலங்கையில் இடம்பெற்ற மிகவும் அமைதியான அனைவரும் பங்களிப்பு செய்த தேர்தலிற்காக தனது பாராட்டுகளை தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீமூன் புதிய அரசாங்கத்தை நல்லாட்சி, நல்லிணக்கம்,பொறுப்புக்கூறுதல்போன்ற விடயங்களில் மேலும் முன்னேற்றத்தை காணுமாறும்வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் நடைமுறையை முன்னெடுத்தமைக்காக ஜனாதிபதிக்கும், இலங்கை மக்களின் வாக்களிப்பு உரிமையை உறுதிசெய்வதற்காக மிகவும் முன்னுதாரமான முயற்சிகளை முன்னெடுத்த தேர்தல் ஆணையாளரையும் அவர் பாராட்டியுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கும், அந்த நாட்டின் நீண்ட கால அமைதி, பொருளாதாரம் போன்றவற்றை ஏற்படுத்துவதற்கு உதவுவதற்கும் தான் தயாராகயிருப்பதாகவும் பான் கீ; மூன் தெரிவித்துள்ளார்.