நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு மூன்று நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் சிறைக்கு செல்ல நேரிடும் என மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் எதிர்க்கட்சிப் பதவியை ஏற்கப்போவதில்லை’ என அவர் கூறமுடியாது என்றும், ஏனென்றால் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படாது என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கும் வரையில் அவருக்கு எதுவித பதவிகளும் வழங்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.