ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்த ஜே.ஸ்ரீரங்கா, பிரபாகணேசன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டியு. குணசேகர, திஸ்ஸவிதாரன மற்றும் திஸ்ஸ அத்தநாயக உள்ளிட்ட 11 பேர் முன்னணியின் தேசியப் பட்டியலிருந்து நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தேசியப் பட்டியல் ஊடாக 12 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னணி அதற்கான உறுப்பினர்களை நியமித்து உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
தேர்தல்களுக்கு முன்பதாக முன்னணியினால் பெயரிடப்பட்டிருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,
திஸ்ஸ விதாரண,
டியு.குணசேகர,
திஸ்ஸ அத்தநாயக்க,
ரெஜினோல்ட் குரே,
ஜே. ஸ்ரீரங்கா,
பிரபாகணேசன்,
ஜீவன் குமாரதுங்க,
டிரான் அலஸ்,
பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்க மற்றும் பியசிறி விஜேயநாயக்க
ஆகிய 11 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதேவேளை டிலான் பெரேரா, ஏ.எச்.எம். பௌசி, கலாநிதி சரத் அமுனுகம, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ் தபா ஆகியோருடன் தேர்தலில் தோல்வி யடைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணியின் உறுப்பினர்கள் அடங்கிய 12 பேர் தேசியப்பட்டியலின் ஊடாக பாராளு மன்றத்திற்கு உள்வாங்கப்பட்டு ள்ளனர்.