புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையை விட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை அதிகரிப்பதாயின் அதற்கு பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பேச்சாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். D c