Breaking
Tue. Dec 24th, 2024

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்னும் சில நாட்களுக்குள் கலைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று மாலை முக்கிய கூட்டமொன்று இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் அல்லது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இச்செய்தி அச்சிக்கு போகும் வரையிலும் வெளியாகவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாகவோ அல்லது வேறு வகையிலையோ செயற்படக்கூடும் என்றும் அந்த தகவல்கள் தெரிவித்தன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிய மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கு இடையில், கூட்டமைப்புக்கான ஒப்பந்தம் 2004 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா கொமினியூஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி மற்றும் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக அன்று அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதான பங்காளியாக இருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)2005 ஆம் ஆண்டு, கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்த விலகியது.

அரசியலிலிருந்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விலகியதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, கூட்டமைபின் தலைவரானார். கடந்த ஜனவரி மாதம் 8 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமை பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைக்கு சென்றது.

இந்நிலையிலேயே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கலைக்கப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகளில், கூட்டமைப்பின் சார்பில் மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் வரையிலும் அந்த கூட்டமைப்பை கலைக்கமுடியாது என்றும் அந்த பிரதிநிகளுக்கு தேர்தல்கள் ஆணையாளரே பொறுப்பாக இருக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அல்லாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.(SR)

Related Post