தேசியப் பட்டியல் குறித்து நீதிமன்றில் மனுத் தொடரப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இவ்வாறு மனுத் தாக்கல் செய்ய உள்ளன.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியலுக்குஇ பங்கு கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் நியமிக்கப்படாமை தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் தனது வருத்தத்தை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் அறிக்கை ஒன்றின் மூலம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தனக்கு நீதிமன்ற உத்தரவு கிடைத்தமையினால் அதற்கமைய செயற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் முன்னணி சார்பாக கட்சிகள் ஒன்றாக இணைந்து செயற்பட்டமையால் 95 ஆசனங்களை பெற்று கொள்ள முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்த அனைவருக்கும் தனிப்பட்ட ரீதியில் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.