பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வந்த சவுதி அரேபியாவில், முதன் முறையாக, நகராட்சி தேர்தலில், பெண்கள் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து, வருகிற டிசம்பர் 12-ம் தேதி, நடைபெறவுள்ள சவுதியின் மூன்றாவது நகராட்சி தேர்தலில், முதல் முறையாக பெண்களும் பங்களிக்க உள்ளனர். இதற்காக, மெக்கா மற்றும் மதினாவில், பெண் வாக்காளர் விவரங்களை பதிவு செய்யும் பணி, கடந்த வாரம் தொடங்கியது. இந்நகரங்களில், முதன் முதலாக, பெண் வாக்காளர்களாக, சபினாஸ் அபு அல்-ஷாமத் மற்றும் ஜமால் அல்-சாதி ஆகியோர் பதிவு செய்து கொண்டனர்.
சவுதி அரசின் இந்த முடிவை பெண்கள் அமைப்பினரும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.