ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபையில் இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், நேபாள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அங்கு பணி புரிகின்றனர். அவர்களில் கடந்த ரமலான் மாதத்தில் 330 பேர் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றனர். துபாய் முஸ்லிம் நாடாக இருந்தாலும் பிற மதத்தினருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது.
துபாயில் இந்துக்கள் வழிபட ஏற்கனவே இரண்டு கோவில் உள்ளது, தற்போது அபுதாபியிலும் கோவில் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய முருகன் கோவில் முஸ்லிம் நாடான மலேசியாவில் தான் இருக்கிறது. உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடான இந்தோனேசியாவில் பல கோவில்கள் இருக்கிறது.
பங்களாதேஷிலும் கோவில்கள் இருக்கிறது.
பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான கோவில்கள் இருக்கிறது, இந்தியாவில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டவுடன் பாகிஸ்தானில் கோவில்கள் இடிக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தான் அதிபராக இருந்த முசாரப் இடிக்கப்பட்ட 500 கோவில்களையும் புதுப்பித்து கட்டி தந்தார்.
அவற்றில் ஒரு பெரிய கோவிலை திறந்து வைக்க அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி சென்று வந்தார்.முஸ்லிம் நாடுகளில் இந்துக்கள் வழிபட கோவில்களும், வழிபாடுகளும் நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள மத சுதந்திரமே காரணமாகும். இஸ்லாத்தின் கண்ணியமே இஸ்லாத்தை நோக்கி அம்மக்களை கூட்டம் கூட்டமாக வரவழைக்கிறது.