நல்லாட்சிக்கு நிற மற்றும் சின்ன பேதங்கள் எதுவும் கிடையாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வெள்ளை ஆடை உடுத்து மலர்க் கூடைகளை எடுத்தக் கொண்டு விஹாரை தோறும் சென்று வழிபாடு செய்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பாவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளது.
இவர்கள் எவ்வாறான நிலையைக் கொண்டிருந்தாலும் தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் முனைப்பின் போது நிற, கட்சி அல்லது சின்ன பேதங்கள் கிடையாது.
எங்களுக்கு யானை சின்னம் பற்றி பிரச்சினையில்லை, சிலரது மனங்களில் அவ்வாறான எண்ணம் காணப்படுகின்றது.
நாம் அதிகாரத்திற்கு அஞ்சப் போவதில்லை. சங்கு சின்னத்திலிருந்து வெற்றிலைக்கு மாறினோம் பின்னர் அன்னப்பட்சி சின்னத்திற்கு மாறினோம். இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களே வெற்றியீட்டினர்.
நாம் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் தேர்தல்களின் போது உறுதி செய்தனர்.
இம்முறையும் அந்த வெற்றியை உறுதி செய்ய நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம் என சம்பிக்க ரணவக்க பலப்பிட்டிய பிரதேசத்தில் மக்கள் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.