இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்ற சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்துவதற்கு சர்வதேச சமூகத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சமூகம் அவ்வாறான விசாரணையை கேட்பது இந்நாட்டு நீதித்துறை முறைமை தொடர்பில் நம்பிக்கையை சீர்குலைப்பதற்காகவென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்தான விசாரணைகளை மேற்கொள்வதற்கு கடந்த அரசாங்கத்தினால் 2009ஆம் ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வாக்குறுதியளித்தாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த குற்றம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளூர் பொறிமுறையில் மாத்திரம் என கூறிய பிரதமர் ரோம உடன்பாட்டில் கையொப்பமிடவில்லை என்பதனால் இந் நாட்டில் ஒருவரும் யுத்த குற்றம் சாட்டப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன் கொண்டு செல்ல முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய உள்நாட்டு மற்றும் சர்வதேசம் ஏற்று கொள்ள கூடிய விசாரணையை இந் நாட்டினுள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.