கச்சத்தீவை மீண்டும் இலங்கையிடம் இருந்து மீள பெறமுடியாது என இந்திய சட்டமா அதிபர் முகுல் ரோஹாட்டிஹி இந்திய உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
கச்சதீவை மீள பெறுவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமும், முன்னாள் முதல்வர் முத்துவோல் கருணாநிதியும் தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
1974ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இருதரப்பு இணக்காப்பாட்டின் அடிப்படையில் இந்த தீவின் அதிகாரம் இல்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
‘இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை. கச்சதீவை மீட்பதற்காக இலங்கை மீது போரா தொடுக்க முடியும்? என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான சட்டத்தரணி ‘கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், ‘இருநாட்டு பிரச்சினைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசிடம் மனு கொடுக்கலாம். அதை மத்திய அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
(NS)