Breaking
Fri. Apr 4th, 2025

ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் நிதியை கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து, கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் 500 ஊழியர்கள் மற்றும் 60 இலட்சம் ரூபாய் நிதி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்டமை குறித்தே கோட்டாபயவிடம் வினவப்பட்டதாக, அந்த ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சென்ற முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனையடுத்து ஊடகங்களுக்கு பதிலளித்த அவர் ரக்னா லங்கா நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்தே தன்னிடம் விசாரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

-அத தெரண-

Related Post