Breaking
Sun. Dec 22nd, 2024

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். நேற்று (25) இந்த வைபவம் இடம்பெற்றிருந்தது.

பிரதமரின் வெற்றியை அடுத்து அமையவிருக்கும் அரசாங்கத்தின் சிறப்பான செயற்பாடுகளுக்கும், நாட்டின் நலனுக்காகவும் இதன்போது விசேட பிரார்த்தனை (துஆ) நடத்தப்பட்டது.

இந்த பிரார்த்தனை வைபவத்தில் கலந்து கொண்ட பிரதமர், தனது வெற்றிக்கு பாரிய பங்களித்த கொழும்பு முஸ்லிம்களுக்கு தனது நன்றியறிதல்களையும் தெரிவித்துக் கொண்டார்.

வைபவத்தில் பிரதமருடன் கொழும்பிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார், கொழும்பு மாநகர மேயர் முஸம்மில், மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விசேட துஆ பிரார்த்தனையை மௌலவி அப்துல் ஹமீத் பஹ்ஜி நடத்தி வைத்தார்.

palli_ranil_003 palli_ranil_001 palli_ranil_006

Related Post