இந்தோனேசியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் ஜோஸ் மொனுவல் கார்சியா மார்க்லோ, ஐ.நா பாதுகாப்புச் சபை ஆசனத்திற்காக இலங்கை ஆதரவை திரட்ட இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, ஜோஸ் மொனுவல் கார்சியா மார்க்லோ அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 3 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர், நாடு திரும்பும் முன்னர், எதிர்வரும் 7 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவார் என ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.