கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு அமேஷா ராஜபக்ச என்ற பெண், கடைக்கு பொருட்களை வாங்க சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அவருடைய சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
சந்தேகம் இருக்குமானால் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிங்களவரான அமேஷா ராஜபக்ச 2009ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.
இதேவேளை ஒருவாரத்துக்கு முன்னர் குறித்த பெண் உடல்கட்டுமான நிலையம் ஒன்றுக்கு சென்று நீச்சல் பயிற்சியை பெற்றுக்கொள்வது தொடர்பாக விசாரித்து வந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.