கொகாகோலா நிறுவனத்திற்கு தற்காலிக அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
களனி கங்கையில் எண்ணெய் கழிவு கலப்பதாக குற்றம் சுமத்தி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த சுற்றாடல் அனுமதிப்பத்திரம் அண்மையில் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டிருந்தது.
சில நிபந்தனைகளின் அடிப்படையில் மீளவும் அனுமதிப்பத்திரத்தை வழங்க சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
இவ்வாறான தவறுகள் மீள இழைக்கப்படாது என நிறுவனம் உறுதியளித்துள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிய காரணத்தினால் தற்காலிக அடிப்படையில் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி தெரிவித்துள்ளார்.
சுற்றாடலை மாசுப்படுத்தியமைக்காக அபராதம் விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடுவல பிரதேசத்தில் அமைந்துள்ள கொகாகோலா நிறுவனத்தின் நிலக்கீழ் குழாய் ஒன்றில் ஏற்பட்ட கசிவினால் களனி கங்கை நீரில் எண்ணைக் கழிவு கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.