நடை பெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புதிய வரலாற்றினை படைத்துள்ளதாகவும்,எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்,வடக்கு,கிழக்கு உள்ளிட்ட நாட்டின் தமிழ் பேசும் மக்கள் அதிமாக வாழும் மாவட்டங்களில் தமது சின்னத்திலோ அல்லது அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டோ தமது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்துக்கான அமைப்பின் தலைவரும்,வவுனியா நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான அப்துல் பாரி தெரிவித்துள்ளார்.
வவுனியா பட்டானிச்சூர அலுவலகத்தின் இடம் பெற்ற எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இடம் பெற்ற கலந்துரையாடலொன்றில் மேற்கண்டவாறு அவர் கூறினார்.
மேலும் அப்துல் பாரி கருத்துரைக்கும் போது மேலும் தெரிவித்துள்ளதாவது –
நடை பெற்று முடிந்த தேர்தலில் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களின் தலைமையில் நான்கு பாராளுமன்றப் பிரதி நிதித்வங்களும்,ஒரு தேசிய பட்டியில் ஆசனமும்,கிடைத்துள்ளது.இதன் மூலம் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகத்திற்கும்,வன்னி வாழ் சிங்கள சமூகத்திற்கும் பணியாற்றும் பலத்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இந்த நாட்டில் மிகவும் முக்கியமானதொன்றாக பார்க்கப்படுகின்றது.12 பாராளுமன்றப் பிரதி நிதிகளை கொண்டிருந்த ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தமது திறமையற்ற அரசியல் சாணக்கியத்தால்,கட்சியின் நிலையினை மக்கள் தேர்தலின் மூலம் புடம்போட்டு காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் வன்னி மாவட்டத்தில் தனித்து போட்டியிடுவதன் மூலம் ஒரு ஆசனத்தை பெற முடியாது போகும் என்பது நன்றாக தெரிந்திருந்தும்,அதே போல் ஆளும் கட்சிக்கு மேலதிகமான ஆசனம் கிடைக்கும் வாய்ப்பு தெரிந்திருந்தும்,அதனை பொருட்படுத்தாது பொருத்தமற்ற அரசியல் செய்வதன் மூலம் இவற்றை இல்லாமல் ஆக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சதிகார கட்சிகளின் கொட்டத்தை மக்கள் இந்த தேர்தலில் அடக்கியுள்ளனர்.
அதே போல் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வன்னி உட்பட நாடு தழுவிய முறையில் தமது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற கோறிக்கையினை வன்னி மாவட்டத்தின் கட்சி போராளிகளின் வேண்டுகோளாக தலைமைக்கும்,கட்சியின் அதி உயர் பீடத்திற்கும் முன்வைக்கவிரும்புகின்றேன் என்றும் வவுனியா நகர சபை முன்னாள் உறுப்பினர் அப்துல் பாரி இதன் போது குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.