Breaking
Sun. Dec 22nd, 2024

எதிர்க்­கட்சித் தலைவர் யாரென்­பதை சபா­நா­ய­கரே தீர்­மா­னிப்பார். சபா­நா­ய­கரின் முடிவே இறுதி முடி­வாகும். தேசிய அரசாங்கத்தின் அமைச்­ச­ர வைப் பட்­டியல் தயா­ரிக்­கப்­பட்­டு­விட்­டது என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார். இது தொடர்­பாக லக்ஷ்மன் கிரி­யெல்ல மேலும் தெரி­விக்­கையில்
எதிர்க்­கட்சித் தலை­வ­ராக எவ­ரது பெய­ரையும் அர­சியல் கட்­சிகள் பிரே­ரிக்­கலாம். இதற்கு எந்­த­வி­த­மான தடையும் இல்லை.

ஆனால் பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்­சித்­த­லை­வரை தேர்ந்­தெ­டுக்கும் அதி­காரம் சபா­நா­ய­க­ருக்கே உள்­ளது. எனவே எதிர்க்­கட்சித் தலை­வரை சபா­நா­ய­கரே தெரிவு செய்வார். அவரின் முடிவே இறுதி முடி­வாகும். தேசிய அர­சாங்கம் என்ற சிந்­தனை திடீ­ரென தோன்­றி­ய­தல்ல. கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்பு மைத்­திரி, ரணில், சந்­தி­ரிகா என்ற முத்­த­ரப்பு பேச்­சு­வாத்­தை­க­ளுக்கு அமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஜனா­தி­பதித் தேர்தல் முடிந்து மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­னதும், அடுத்து இடம்­பெறும் பொதுத் தேர்­த­லுக்குப் பின்னர்.இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து தேசிய அரசு ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மென இணக்கம் காணப்­பட்­டது. இதற்­க­மை­யவே பொதுத் தேர்­தலின் பின்பு ஐக்கிய தேசிய முன்­னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இணைந்து தேசிய அரசை அமைக்கவுள்ளனர்.

தற்­போது அமைச்­சர்கள் பகிர்வில் இரண்டு கட்சிகளும் இணக்கப்பாடுகளை எட்டியுள்ளதோடு அமைச்சர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டு விட்டது என்றார்.

Related Post