Breaking
Sun. Dec 22nd, 2024

இலங்கையின் 8வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறுகிறது. இலங்கையின் 20வது சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் மூன்றாவது குடிமகனாகவும் 20வது சபாநாயகராகவும் தெரிவாகியுள்ள கரு ஜயசூரிய பற்றிய குறிப்பு.

கரு ஜயசூரிய, கம்பஹா மாவட்டத்தின் ஹாப்பிட்டிகம கோரளையில் மீரிகம பிரதேசத்தில் புகழ்பெற்ற வர்த்தக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜயசூரிய குடும்பத்தின் மூத்த புதல்வராக பிறந்தார்.

தாய் வழியானது அத்தனகல்லை பண்டாரநாயக்கர்களுடன் போட்டியிட்ட செனவிரத்ன குடும்பத்தை சேர்ந்த பலமான அரசியல் உரிமையும் கரு ஜயசூரியவுக்கு கிடைத்தது.

ஆரம்ப கல்வியை மீரிகம கந்தன்கமுவ மகாவித்தியாலத்தில் கற்ற ஜயசூரிய, கொழும்பு ஆனந்த கல்லூரியில் உயர்கல்வியை பூர்த்தி செய்தார்.

பிரித்தானியாவின் பட்டய கணக்காளர் நிறுவனத்தில் மேலதிக கல்வியை பெற்ற அவர், அதன் பின்னர், லண்டன் போல்டிக் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் வர்த்தக பொருள் விற்பனை தொடர்பான மேலதிக கல்வியை கற்றார்.

பிரான்சில் உள்ள ஐரோப்பிய வணிக கல்லூரி மற்றும் இன்சியட் நிறுவனத்திலும் உயர் நிர்வாக கல்வியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த கருஜயசூரிய, பொருட்களை எடுத்துச் செல்லுதல், போக்குவரத்து தொடர்பான பட்டய நிறுவனத்தில் விருது பெற்ற உறுப்புரிமையும் பட்டய தொழில் முகாமைத்துவ நிறுவனத்தில் விருது பெற்ற உறுப்புரிமையும் கிடைத்தது.

அதேவேளை அதிகாரியாக 1965 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட ஜயசூரிய 1972 ஆம் ஆண்டு வரை இராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.1972 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி மருத்துவரான வசந்தா குணசேகர ஓவிட்டிகல என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இராணுவத்தில் இருந்து விலகிய பின்னர் வர்த்தக துறையில் ஈடுபட்டு அதி திறமையான முகாமையாளராக பரிணமித்த கரு ஜயசூரிய, குறுகிய காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழை பெற்றார்.

நாளுக்கு நாள் முகாமைத்துவ துறையில் நிபுணத்துவம் பெற்று புகழ்பெற்ற கரு ஜயசூரிய 80 ஆண்டுகள் முடிவடையும் போது52 முன்னணி நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் தலைவராகவும் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் பொறுப்புகளை வகித்துள்ளார்.

வீழ்ச்சியடைந்து வந்த பல நிறுவனங்களை அணியாக வேலை செய்யும் அவரது எண்ணக்கருவுக்கு அமைய பணியாற்றி அதிகளவு பிரதிபலன்களை பெற்றுக்கொண்டார்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளராக தேசமான்ய என்.பி.பி. பண்டித்தரத்ன அணியின் பின் வரிசை உறுப்பினராக இருந்த கரு ஜயசூரிய, இளம் வயதிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடான அரசியலில் கால்பதித்தார்.

1977 புரட்சியின் பின்னர், வேகமாக உயிரூட்டப்பட்டு எழுந்து வந்த பாரிய பொருளாதார முகாமைத்துவப்படுத்தலில் முக்கிய நிறுவனமாக இருந்த, தனியார்மயப்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக கரு ஜயசூரிய, ஜே.ஆர். ஜயவர்தன அரசினால் நியமிக்கப்பட்டார்.

1977 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு பதிலாக அரச மற்றும் தனியார் துறையை இணைந்த பொருளாதாரத்திற்கான பகிரங்க வழியை சர்வதேசத்திற்கு திறந்து விடுவதே ஜயவர்தனவின் நோக்காக இருந்தது.

இந்த கொள்கையை செயற்படுத்தும் கேந்திர நிறுவனமாக இருந்த பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழு, தனது பரிட்சாத்த நடவடிக்கை ஆரம்பித்ததுடன் இரண்டு கொரிய நிறுவனங்களுடன் இணைந்து கொரியா – சிலோன் புட்வெயார் நிறுவனத்தை தொடங்கியது. இந்த நிறுவனம் இரண்டு வருடங்களில் தோல்வியடைந்த நிலையில், இரண்டு நாடுகளின் இணக்கத்துடன் அந்த நிறுவனத்தின் புதிய தலைவராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டார். அப்போது 2.50 ரூபாவாக இருந்த நிறுவனத்தின் பங்குகளை 280 ரூபா வரை உயர்த்த குறுகிய காலத்தில் கருசூரிய நடவடிக்கை எடுத்தார். ஒரு காலத்தில் உலக காலணி உற்பத்தி நிறுவனங்களில் முக்கிய நிறுவனமாக இந்த நிறுவனம் காணப்பட்டது.

Related Post