Breaking
Sat. Nov 23rd, 2024

கற்காலத்துக்கு அடுத்த காலகட்டத்தில், மக்கள் வெண்கல உபகரணங்களை பயன்படுத்த தொடங்கிய காலத்தில் அழிந்துபோன ஸ்பார்ட்டாவின் மிசிநேயியன் கலாச்சாரத்தைச் சேர்ந்த மாளிகை கண்டறியப்பட்டுள்ளது.

பண்டைய கிரேக்கத்தின் கலாச்சாரமான ஸ்பார்ட்டாவின் மிசிநேயியன் கலாச்சாரத்தைச் சேர்ந்த மாளிகையின் மிஞ்சியிருந்த பகுதிகளை கிரீஸ் நாட்டு அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். கிரீஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஸீரோகாம்பி என்ற பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பிரபலமாக இந்தக் கலாச்சாரம் கருதப்படுகிறது.

பத்து அறைகள் கொண்ட இந்த மாளிகை அயியோஸ் வேசிலேயியோஸ் என்று அழைக்கப்படுகிறது. இங்கு பண்டைய காலத்து மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு சுவரோவியங்கள், காளையின் தலையோடு அமைக்கப்பட்ட சடங்குகள் செய்ய பயன்படும் கோப்பை உட்பட இந்த வீரச் சமூகத்தின் பல வெண்கல வாள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மாளிகை கி.மு. பதினான்காம் நூற்றாண்டு காலத்தில் மண்ணுக்குள் புதைந்ததாக தெரியவந்துள்ளது. இது தவிர, கிரேக்க மொழியின் ஆரம்பகால எழுத்து வடிவமான ‘லீனியர் பி’ பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களும் இதில் கிடைத்துள்ளன என கிரீஸ் நாட்டின் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இந்தச் சமூகத்தினரைப் பற்றிய பல உண்மைகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post