Breaking
Sat. Dec 21st, 2024
தென்னாசிய நாடுகளில் இருந்து வீட்டு பணியாட்களை அழைப்பதில் ஏற்பட்டுள்ள கஸ்டங்களை சீர்செய்து கொள்ளும் ஒரு கட்டமாக சவூதி அரேபியாவின் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். ஐந்து நாள் பயணமாக அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி வர்த்தக சம்மேளனத்தின் பாரசீக குடா தேசிய ஆட்சேர்ப்பு குழுவினால் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் மேலதிக தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
இலங்கையின் பணிப்பெண் ரிசானா நபீக் சவூதியில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர் அங்கு செல்லும் இலங்கை பணிப் பெண்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த வருட ஆரம்பத்தில் சவூதி அரேபியா, இலங்கை உட்பட்ட நாடுகளுடன் பணிப்பெண் ஆட்சேர்ப்பு தொடர்பில் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டது.
இதற்கிடையில் சவூதியில் பணியாற்றும் 5 இலட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் தமது தொழில் தருனர்களிடம் இருந்து கடந்த வருடத்தில் தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில் முரண்பாடுகளே இதற்கான காரணங்களாகும்.
இந்தநிலையில் சவூதியின் புதிய உடன்படிக்கையின்படி சுகவீன விடுமுறைக்கு கொடுப்பனவை வழங்கல், ஒரு மாத கொடுப்பனவு விடுமுறை போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Post