Breaking
Mon. Dec 23rd, 2024

–எம்.ஐ.அப்துல் நஸார்–

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பில் அல் நஹ்யான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று  (03) இலங்கை வந்துள்ளார்.

இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை புதிய அரசாங்கத்தின் கீழும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Post