மோட்டார் வாகன சட்டத்தின் பிரகாரம் அலைபேசிகளை பயன்படுத்தி கொண்டு வாகனம் செலுத்துவது குற்றமாகும் என்று தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், புளுடூத், ஹேன்ப்ரியை பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
புளுடூத், ஹேன்ப்ரியை பாவித்துக்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தண்டம் பத்திரிகையை வழங்கமுடியாது என்றும் அதனால் அவ்வாறான சாரதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாதுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார்.
சீருடையில் கடமையில் இருக்கும் இலங்கையில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு போக்குவரத்து சட்டத்தின் கீழ் செயற்படமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.