Breaking
Mon. Nov 18th, 2024

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக இந்­தியா யுத்­தத்தை பிர­க­ட­னப்­ப­டுத்­தாது. ஆனால், இந்த முறை யுத்தம் நடந்தால் பாகிஸ்­தானை இந்­தியா 4 நாடு­க­ளாக பிள­வு­ப­டுத்­தி­விடும் என்று பா.ஜ.க.தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகு­தியில் கன­ரக ஆயு­தங்­க­ளுடன் பாகிஸ்தான் தொடர்ச்­சி­யாக தாக்­கு­தலை நடத்தி வரு­கி­றது. இந்த நிலையில் இந்­தியா- , பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இந்­தி­யா­வுக்­குதான் பேரி­ழப்பு ஏற்­படும் என்று பாகிஸ்தான் இராணுவ தலைமை தள­பதி ரஹீல் ஷெரீப் மிரட்டல் விடுத்­துள்ளார்.

இது தொடர்­பாக பா.ஜ.க. தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி தெரி­வித்­துள்­ள­தா­வது:

பாகிஸ்­தா­னிடம் எந்த ஒரு வலி­மையும் இல்லை. அது விரக்­தி­ய­டைந்து போய் பல­வீ­ன­மா­ன­தாக இருக்­கி­றது.

அங்கே இருக்கும் மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சாங்கம் ஒரு பொம்மை அர­சுதான்.

பாகிஸ்தான் இரா­ணுவம் இந்­தி­யா­வுடன் யுத்­தத்தை நடத்த விரும்­பினால் நாமும் அதற்கு தயார்தான். ஆனால்,

நாம் எந்த ஒரு நாட்­டு­டனும் போர் பிர­க­ட­னத்தை வெளி­யிட்­ட­தில்லை. நம்மை பிற­நா­டு­கள்தான் போரில் வலிந்து தள்­ளி­யி­ருக்­கின்­றன. ஏற்­கனவே நடந்த ஒரு யுத்­தத்தில் பாகிஸ்தான் 2 நாடு­க­ளாக பிள­வு­ப­டுத்­தப்­பட்­டது.

இனி ஒரு முறை இந்­தி­யா­வுடன் பாகிஸ்தான் யுத்தம் நடத்தினால் அந்த நாடு 4 நாடுகளாக பிளவுபடுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

Related Post