அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் பிரதேசத்தில் துறை முகத்தினை அண்டிய கடற்பகுதி கடலரிப்புக்குள்ளாகிவருவதனால் அப்பிரதேச மக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் இந்த கடலரிப்பு பிரதேசத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் .இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்து நிலைமையினை பார்வையிட்டதுடன்,பிரதேச மக்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தினார்.
இந்த கடலரிப்பால் கொண்டுள்ள இழப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தவுள்ளதாகவும்,கப்பல;.துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க,மற்றும் கடற்றொழில்,நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவையும் இந்த பிரதேசத்திற்கு அழைத்துவரவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன் போது தெரிவித்தார்
,பிரதி அமைச்சர் அமீர் அலி,பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப்,இஷாக் ஹாஜியார்,எம்.எச்.எம்.நவவி ஆகியோரும் இங்கு வருகைத்தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.