Breaking
Fri. Dec 27th, 2024

– அபூ அஸ்ஜத் –

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கின்ற இயக்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்களின் நலனை மையப்படுத்தியே தமது செயற்பாட்டினை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒக்டோபர் மாதமளவில் கட்சியின் செயற்பாடுகள் விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் இரண்டாவது நாளான சூறாவளி சுற்றுப் பயணத்தின் போது மாவடிப்பள்ளியில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையலான கட்சியின் பாராளுமன்ற பிரதி நிதிகள் குழுவினர் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரும்,கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.ஜமீல் உட்பட பெருந்திரளான கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்,மற்றும் போராளிகள் என பெருந்திளரான மக்கள் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது,நற்பிட்டிமுனை,மளிகைக்காடு,மாவடிப்பள்ளி,இறக்காமம்,வாரிப்பொத்தாஞ்சேனை ஆகிய பிரதேசங்களுக்கு இன்று விஜயம் செய்த தலைவர் றிசாத் பதியுதீன் அம்மக்களுடன் கலந்துரைாயடல்களை நடத்தியதுடன்,நடந்து முடிந்த தேர்தலில் நமது கட்சியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் தமது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

மேலும் இந்த கூட்டங்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றும் போது கூறியாவது அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சிக்கு வாக்களித்த மக்கள் தமக்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொள்ளமுடியாமல் போனதையிட்டு கவலையோ,வேதனையோ கொள்ளத் தேவையில்லை.உங்களது தேவைகளை நிறைவேற்றி தரவேண்டியது எமது கட்சியினதும்,அமைச்சராக ,பிரதி அமைச்சராக இருக்கின்ற எங்களின் பொறுப்புமாகும்.

உங்களது தேவைகளை,பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வினை பெற்றுத் தர மாதத்தில் ஒரு நாள் நாங்கள் இங்கு வந்து அந்த பணியினை செய்யவுள்ளோம்.நீங்கள் கொழும்புக்கு பணம் செலவு செய்து அந்த பணியினை பெற வேண்டிய தேவையிருக்காது,உங்களது காலடிக்கு அந்த சேவைகளை நாம் கொண்டுவருவோம்.ஏனையவர்கள் சொல்கின்றதை போன்று நாங்கள் பொய் வாக்குறுதிகளை உங்களுக்கு தரமாட்டோம்.தேர்தல் காலத்தில் நாங்கள் வந்து உங்களுக்கு சொன்னோம் எதனை செய்வோம் என்று.ஆனால் சிலர் உங்களது வாக்குகளை பணத்துக்கு அடிமைப்படுத்திவிட்டனர்.இனி அவர்கள் உங்களுக்கு பணியாற்றமாட்டார்கள்.இனிவரும் காலங்களில் எமது மக்கள் வாக்கு என்கின்ற பலத்தினை பணத்துக்கும்,ஏனைய பொருட்களுக்கும் அடிமையாக மாறி தமது வாக்கின் பலத்தை இழக்க செய்துவிட வேண்டாம் என்றும் கேட்கவிரும்புகின்றேன்.வாக்கின் பெறுமதி தொடர்பில் மக்களை நாம் தெளிவுபடுத்தவுள்ளோம்.

இந்த கிராமம் ஒரு சிறிய கிராமம்,இந்த கிராமத்தில் எத்தனையோ தேவைகள் இருக்கின்றது,கடந்த முறை வந்த போதும் இந்த பள்ளிவாசல் கட்டி முடிக்கப்படவில்லை.இது குறித்து எமது கட்சியின் முக்கியஸ்தர்களுடனும்,இந்த பிரதேச எமது கட்சிப் பிரதி நிதிகளுடனும் கலந்துரையாடி எங்களால் ஆன உதவிகளை செய்யவுள்ளோம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

இநத பயணத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதி தலைவரும்,முன்னாள் அமைச்சருமான வேதாந்தி சேகு இஸ்ஸதீனையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

ri5 ri4.jpg2_4 ri4.jpg2_4.jpg3_4

Related Post