கொழும்பு மாநகர சபைக்குட்ட பகுதிகளின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளின் மாநாடு இன்று 30ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு நாரஹேண்பிட்டிய அபயராம விகாரையில் நடைபெறுகிறது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு, அமைச்சர்கள் தொகுதி அமைப்பாளர் உட்பட சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டை முன்னிட்டு கொழும்பு கிழக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளரினால் நடைபவணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.