ஜெருசலேத்தில் உள்ள அல்-அக்ஸா வளாகத்தில் பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேலிய காவல்துறையுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
யூதர்களின் புத்தாண்டு பிறப்பதற்கு சில மணிநேரம் முன்னதாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
அந்த வளாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்குள் நுழைந்த இஸ்ரேலிய காவல்துறையினர் அங்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக பாலஸ்தீன தரப்பினர் கூறுகின்றனர்.
கிழக்கு ஜெருசலேத்தில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வெடிபொருட்களை கண்டுபிடிப்பதற்காக நடத்தப்பட்ட தேடுதலின்போதே இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளது.
இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் அமைதி நிலவுவதாக கூறப்படுகின்றது.
எனினும் ‘பழைய நகரம்’ பகுதியில் வன்முறைகள் தொடர்ந்து நடந்துள்ளன.