Breaking
Thu. Dec 26th, 2024

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கான தலை­மைத்­துவ பயிற்­சியை நிறுத்­து­வ­தற்கு பல்­க­லைக்­க­ழக மற்றும் பெருந்­தெ­ருக்கள் அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

நாட­ளா­விய ரீதியில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு வரு­டந்­தோறும் புதி­தாக மாண­வர்­களை இணைத்­துக்கொள்ளும்போது முன்­னைய அர­சாங்­கத்தின் கீழ் மாண­வர்­க­ளுக்­கான தலை­மைத்­துவ பயிற்சி ஒன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

அந்­த­வ­கையில் கடந்­த­கா­லங்­களில் வரு­டந்­தோறும் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரி­வாகும் மாண­வர்கள் இந்த பயிற்­சி­களில் ஈடு­ப­டு­வது கட்­டா­ய­மா­ன­தாக இருந்­த­தோடு இவர்­க­ளுக்­கான பயிற்­சி­யா­னது இரா­ணு­வத்­தி­ன­ரா­லேயே வழங்­கப்­பட்டு வந்­தது.

இவ்­வா­றான நிலையில் தேசிய அர­சாங்­கத்தின் கீழ் இது­வரை பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­காக வழங்­கப்­பட்டு வந்த பயிற்சி நெறிக்­குப்­ப­தி­லாக மாண­வர்­களின் சர்­வ­தேச மொழித்­தி­றனை மேம்­படுத்தும் திட்­ட­மொன்றை ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக பல்­க­லைக்­க­ழக மற்றும் பெருந்­தெ­ருக்கள் அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­துள்ளார்.

இந்த திட்டம் மாண­வர்­களின் எதிர்­கா­லத்­திற்கு மேலும் வலுச்­சேர்ப்­ப­துடன் மாண­வர்களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் அவர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி பல்கலைக்கழக மாண
வர்கள் சுதந்திரமாக கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்துவது புதிய அரசாங்கத்தின் நோக் கம் என அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post